விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம்தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் புரட்சித்தளபதி திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் வரவேற்புரையாக நகர தலைவர் ஏழுமலை, தெற்கு வட்டார தலைவர் கணேசன், வடக்கு வட்டார தலைவர் ராஜாராம், வடக்கனந்தல் நகர தலைவர் தெய்வநாயகம், ஆகியோர் வரவேற்றார்கள். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிஎன்பி செல்வராஜ், வீரமுத்து, நாட்டான்மை குணசேகரனா, மாவட்ட துணைதலைவர் செந்தில்குமார், மாவட்டபொதுசெயலர்கள் சின்னையன், தங்கவேல், தங்கராசு, முருகேசன், ஏகாபாண்டியன், ஊடக பிரிவு தனபால், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாழப்பாடி இராமசுகந்தன், சேலம் மாவட்ட தலைவர் அர்த்தனாரி, முன்னால் எம்எல்ஏ சிவராமன், அனையரசு, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், ஆகியோர் சிறப்புரையாற்றி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இலவசமாக சேலை வேட்டி வழங்கினார்கள். முன்னதாக மு.நகர தலைவர் ரகுராஜன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள். வரும் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து ராகுல்காந்தி தான் பிரதமராவார் என பேசினார்கள்.

இதில் மாவட்ட, வட்டார,நகர நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு காஜாமொய்தீன், தொழிலாளர் பிரிவு ரமேஷ், மற்றுமகட்சி நிர்வாகிள் கலந்துகொண்டனர்.

Reporter-7
விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பத்தில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் காசாம்பு பூமாலை தலைமையில் பா.ம.க கட்சி கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கபட்டது .

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் கீழ்குப்பத்தில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் காசாம்பு பூமாலை தலைமையில் பா.ம.க கட்சி கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கபட்டது. வரவேற்புரை மாவட்டதுணைசெயலாளர் தாண்டவராயன்,நன்றியுரை ஒன்றியசெயலாளர் வெங்கடேசன்,முடிவுரை ஒன்றியஅமைப்புசெயலாளர் தமிழ்மணி,சிறப்புரை ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் கீழ்குப்பம்கிளை தலைவர் இளங்கோவன்,துணைதலைவர் பிரகாஷ்,செயலாளர் கலியமூர்த்தி,மணிகண்டன்,பொருளாளர் பிரபாவதி,மாவட்ட இளைஞர் துணைசெயலாளர் புருஷோத்தமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணண்,மாவட்ட துணை தலைவர் கல்ராஜ் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முத்துவேல் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தலைவர் அன்பு சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய வன்னியர் சங்கம் தலைவர் நா. மணி மற்றும்
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Reporter-7 விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

திருச்சி மாவட்டம்

மணப்பாறை அருகே சுங்கச்சாவடி பதாகை விழுந்ததில் மூதாட்டி பலி கண்டுகொள்ளாத சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் அவ்வழியாக சென்ற நடிகர் கருணாஸ் ஆறுதல்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்த பிச்சை என்பவர் மனைவி பொன்னம்மாள் இவர் வீட்டில் இருந்து எதிரே உள்ள தோட்டத்திற்கு ஆடுகள் மேய்கின்றதா என்று பார்க்க திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வழியில் சுங்கச்சாவடியின் பதாகையில் கடைசி ஒரு பகுதி பலத்த சூறை காற்றின் காரணமாக மேலிருந்து கீழ் விழுந்ததில் அவ்வழியே சென்ற மூதாட்டி பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை அறிந்த உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த உயிர் பலி சம்பவத்தை பற்றி சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் முறையிட்டும் கண்டுகொள்ளாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே திண்டுக்கல் சென்ற நடிகர் கருணாஸ் சாலை மறியல் காரணமாக காரில் இருந்து இறங்கி வந்து இறந்த பொன்னம்மாளின் கணவராகிய பிச்சைக்கு ஆறுதல் கூறியும். மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி அவர்களிடம் சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறந்த பொன்னம்மாள் குடும்பத்திற்கு உரிய நடவடிக்கை அளிக்குமாறு கூறிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் ஊர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இறந்த பொன்னம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Report7 செய்திகளுக்காக
மணப்பாறை இருந்து அப்துல்லா.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காமராஜரின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணப்பாறை நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா, மாவட்ட பொருளாளர் சோலையப்பன் ஆகியோர் முன்னிலையில் காமராஜரின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் முன் அமைத்திருந்த கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்த பிறந்தநாள் விழாவில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Report7 செய்திகளுக்காக
மணப்பாறை இருந்து அப்துல்லா.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில்வே ஸ்டாண்ட் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் சிறு சிறு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இன்று மதியம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் இறந்து கிடந்தார், இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல்துறையினர் இறந்தவர் யார் விலாசம்? தெரியாத நிலையில் இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்தவரின் சட்டை காலரில் கரூர் பரமத்தி வேலூர் என்ற விலாசம் உள்ளது, இறந்தவரைப் பற்றி தகவல் தெரிந்தால் மணப்பாறை காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி எண் 04332 260532

Report7 செய்திகளுக்காக மணப்பாறை இருந்து அப்துல்லா.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பழைய இரும்பு கடைக்கு கையில் குழந்தையுடன் திருட்டு சைக்கிள் விற்க வந்த நபரை கடையின் உரிமையாளர் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி ரோட்டில் உள்ள பழைய இரும்பு கடைக்கு புத்தநாத்தம் தெற்கு தெருவை சேர்ந்த மூக்கன் மகன் மதுரை வீரன் என்பவர் கையில் 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு சைக்கிளை தள்ளிக்கொண்டு விற்பதற்காக வந்துள்ளார்.

இதனை பார்த்த கடையின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது முதலில் தனது குழந்தை என்றும் பிறகு தனது தங்கை குழந்தை என்றும் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் சந்தேக அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மணப்பாறை உதவி காவல் ஆய்வாளர் ரூபினி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் கையில் வைத்திருக்கும் குழந்தை திருச்சி மாவட்டம் சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த நல்லு நல்லம்மாள் என்பவரது குழந்தை என்றும் நல்லம்மாள் மதுரை வீரன் தங்கை என்றும் இந்தக் குழந்தை தங்கையின் குழந்தை என்றும் இந்த சைக்கிள் ஆலம்பட்டி புதூர் பகுதி அருகே உள்ள ஒரு கடையில் நின்றதாகவும் திருடி வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். உடனே அவரை சந்தேக அடிப்படையில் கையில் குழந்தையுடன் மணப்பாறை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

எனது செய்திகளை எடுத்து பயன்படுத்தும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

Report7 செய்திகளுக்காக மணப்பாறை இருந்து அப்துல்லா.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்தியன் வங்கியில் நகை அடகு வைத்து பணம் வாங்கி சென்ற பெண்ணிடம் ரூ.22ஆயிரம் பணத்தை பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் இவரது மனைவி அருள்மேரி இவர் மணப்பாறையில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் தேவைக்காக தனது இரண்டு பவுன் தங்க சங்கிலியை அடகு வைக்க வந்துள்ளார்.
இந்நிலையில் வங்கியில் அடகு வைத்துவிட்டு ரூபாய் 22 ஆயிரத்து 500 பணம் கைப்பேசி வங்கி புத்தகம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக வங்கியின் வெளியே உள்ள கடையில் நின்று விட்டு ரோட்டில் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நபர்கள் அருள் மேரியின் கையிலிருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓடிச் சென்றனர்.

உடனே மணப்பாறை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து அருள்மேரி புகார் அளித்ததின் பேரில் விரைந்து வந்த மணப்பாறை காவல்துறையினர், முதல்கட்ட விசாரணையில் வங்கி அருகே உள்ள சிசிடிவி பதிவினை பார்த்த பார்த்த காவல்துறையினர், பதிவில் அருள்மேரி பணம் வாங்கியதில் இருந்தே அருகிலேயே இருந்து நோட்டம் பார்த்தும், அருள்மேரி உடன் செல்வதும், கொள்ளையர்கள் திட்டமிட்டு பணம் பறித்து சென்றது தெரிய வருகின்றது, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனது செய்திகளை எடுத்துக் பதிவு செய்துகொள்ளும் நண்பருக்கு நன்றி.

Report7 செய்திகளுக்காக மணப்பாறை இருந்து அப்துல்லா.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மணல் லாரி மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் – வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் மணல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை 108 அவசர வாகணத்தின் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்கு வரத்தை சீர்படுத்தினர் விபத்தினால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக திண்டுக்கல்- வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

report 7 செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர்
அப்பாஸ்

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருமணமாகி 41 நாட்கள் முடிந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகானந்தம் இவர் கேரளாவில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த மாதிரி பட்டியை சேர்ந்த முருகன் மகள் வெண்ணிலா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடிந்து 10 நாட்களில் முருகானந்தம் கேரளாவில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இருவருக்கும் திருமணம் முடிந்து 41 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து ஊர் திரும்பி வந்துபோது கணவன் மனைவி இருவருக்கு
சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், சிறுசிறு வாய்த்தகராறு வந்ததாகவும், கூறுகின்றார்கள், திடீரென நேற்று இரவு முருகானந்தம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாகவும் அதனை பார்த்த மனைவி வெண்ணிலா கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பார்த்து தகவலின் பேரில் துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் மார்நாடு மற்றும் காவலர்களுடன் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Report7 செய்திகளுக்காக துவரங்குறிச்சி இருந்து மருதராஜன் அப்துல்லா

விழுப்புரம் மாவட்டம்

கள்ளக்குறிச்சியில் நாம்தமிழர் கட்சியினர் கலந்தாய்வு மற்றும் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நாம்தமிழர் கட்சியினர் கிராமம் தோறும் கிளைகள் திட்டத்தின் விளக்க கலந்தாய்வு மற்றும் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டசெயலாளர் ரமேசுபழனியப்பன் தலைமையில் கள்ளக்குறிச்சி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
நிகழ்வில்
சங்கராபுரம் முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் சங்கர்
இளைஞர் பாசறை செயலாளர் சதீஸுக்குமார், மாணவர் பாசறை ரஞ்சித்குமார் ,மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷணன்,நவநீதராஜ் ,நவீன்,இளவரசன், அலைவேல்ராசா, ராம்குமார் , ஷேக்மும்மது ,
சின்னசேலம் ஒன்றிய இணைசெயலாளர் மணிகண்டன், சின்னமணி ,சையது முஸ்தபா , சேகர் மற்றும் ஆகியோர் கலந்துகொண்டனர் ,
மாவட்ட செயலாளர் இரமேசு பழனியப்பன் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனார்.

விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்