விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம்தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் புரட்சித்தளபதி திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் வரவேற்புரையாக நகர தலைவர் ஏழுமலை, தெற்கு வட்டார தலைவர் கணேசன், வடக்கு வட்டார தலைவர் ராஜாராம், வடக்கனந்தல் நகர தலைவர் தெய்வநாயகம், ஆகியோர் வரவேற்றார்கள். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிஎன்பி செல்வராஜ், வீரமுத்து, நாட்டான்மை குணசேகரனா, மாவட்ட துணைதலைவர் செந்தில்குமார், மாவட்டபொதுசெயலர்கள் சின்னையன், தங்கவேல், தங்கராசு, முருகேசன், ஏகாபாண்டியன், ஊடக பிரிவு தனபால், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாழப்பாடி இராமசுகந்தன், சேலம் மாவட்ட தலைவர் அர்த்தனாரி, முன்னால் எம்எல்ஏ சிவராமன், அனையரசு, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், ஆகியோர் சிறப்புரையாற்றி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இலவசமாக சேலை வேட்டி வழங்கினார்கள். முன்னதாக மு.நகர தலைவர் ரகுராஜன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள். வரும் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து ராகுல்காந்தி தான் பிரதமராவார் என பேசினார்கள்.

இதில் மாவட்ட, வட்டார,நகர நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு காஜாமொய்தீன், தொழிலாளர் பிரிவு ரமேஷ், மற்றுமகட்சி நிர்வாகிள் கலந்துகொண்டனர்.

Reporter-7
விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பத்தில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் காசாம்பு பூமாலை தலைமையில் பா.ம.க கட்சி கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கபட்டது .

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் கீழ்குப்பத்தில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் காசாம்பு பூமாலை தலைமையில் பா.ம.க கட்சி கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கபட்டது. வரவேற்புரை மாவட்டதுணைசெயலாளர் தாண்டவராயன்,நன்றியுரை ஒன்றியசெயலாளர் வெங்கடேசன்,முடிவுரை ஒன்றியஅமைப்புசெயலாளர் தமிழ்மணி,சிறப்புரை ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் கீழ்குப்பம்கிளை தலைவர் இளங்கோவன்,துணைதலைவர் பிரகாஷ்,செயலாளர் கலியமூர்த்தி,மணிகண்டன்,பொருளாளர் பிரபாவதி,மாவட்ட இளைஞர் துணைசெயலாளர் புருஷோத்தமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணண்,மாவட்ட துணை தலைவர் கல்ராஜ் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முத்துவேல் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தலைவர் அன்பு சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய வன்னியர் சங்கம் தலைவர் நா. மணி மற்றும்
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Reporter-7 விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

கள்ளக்குறிச்சியில் நாம்தமிழர் கட்சியினர் கலந்தாய்வு மற்றும் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நாம்தமிழர் கட்சியினர் கிராமம் தோறும் கிளைகள் திட்டத்தின் விளக்க கலந்தாய்வு மற்றும் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்டசெயலாளர் ரமேசுபழனியப்பன் தலைமையில் கள்ளக்குறிச்சி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
நிகழ்வில்
சங்கராபுரம் முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் சங்கர்
இளைஞர் பாசறை செயலாளர் சதீஸுக்குமார், மாணவர் பாசறை ரஞ்சித்குமார் ,மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷணன்,நவநீதராஜ் ,நவீன்,இளவரசன், அலைவேல்ராசா, ராம்குமார் , ஷேக்மும்மது ,
சின்னசேலம் ஒன்றிய இணைசெயலாளர் மணிகண்டன், சின்னமணி ,சையது முஸ்தபா , சேகர் மற்றும் ஆகியோர் கலந்துகொண்டனர் ,
மாவட்ட செயலாளர் இரமேசு பழனியப்பன் புதியதாய் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனார்.

விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

கள்ளக்குறிச்சி நகரத்தின் சார்பாக பாரத பிரதமர் மோடிஅவர்களின் நான்கு ஆண்டின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரத்தின் சார்பாக பாரத பிரதமர் மோடிஅவர்களின் நான்கு ஆண்டின் சாதனை விளக்கியும் ஷிமபிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா நகர்.மந்தைவெளி.கமிட்டி தெருமுனை பிரச்சாரம் நடந்தது தலைமை நகர தலைவர் சர்தார் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினாராக நா.நீ.ராஜேஷ் மாவட்ட துணை தலைவர் முன்னிலை பிச்சுமணி மாவட்ட தலைவர் பிரச்சார பிரிவு நகர துணை தலைவர்கள் இளையராஜா, தரணிதரன், கந்தசாமி,நகர செயலாளர்கள் பாலசுப்பரணியன்,குமரவேலு அர்ஜீனன்,மகேந்திரன், இளைஞரனி தலைவர் வேல்முருகன் மாரியப்பிள்ளை கலைவாணன் ஏழமலை மற்றும் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினார்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

Reporter-7
விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

நயினார்பாளையத்தில் வாசவி கிளப் மற்றும் கண் மருத்துவர் டாக்டர் குருமூர்த்தி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் நயினார்பாளையத்தில்
வாசவி கிளப் மற்றும் கண் மருத்துவர் டாக்டர் குருமூர்த்தி இணைந்து நடத்தும் தந்தைபெரியார் பள்ளியில்இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் சுமார் 200மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,மற்றும் கோவில்,பள்ளி தூய்மைபடுத்தல்,தந்தைபெரியார் பள்ளியில் மரகன்று நடுதல்,மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு,பேன வழங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினாராக இன்டர்நேஷனல் டிரஸ்ஸரர் சுதாகர், இன்டர்நேஷனல் புரோகிராம் கோ ஆர்டினேட்டர்பாலசுந்தர் , இன்டர்நேஷனல் கோ ஆர்டினேட்டர்அரவிந்தன்,
மண்டல தலைவர் கருணாகரன்,மண்டல செயலாளர் பாபு,
வட்டார தலைவர் பாலமுருகன்,ஆர்ய வைஸ்ய மகாசபை தலைவர் நயினார்பாளையம் ரமேஷ்.
அழைத்து மகிழும் தலைவர் பாபு,செயலாளர் சிவகுமார்,பொருளாளர் நித்யானந்தம் மற்றும் இதில் வாசவிகிளப்! உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Reporter-7
விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர்
அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

நயினார்பாளையம் நூலகத்தில் மணக்கோலத்தில் புரவலர்களாக இணைந்த திருமண ஜோடிகள்.

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம்
நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த
பொதுமக்கள் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
மற்றவர்களிடத்தும் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று வெங்கடேஷ் என்பவருக்கு திருமணம் நடந்த போது மணமக்களை வாழ்த்த வந்த நயினார்பாளையம் நூலகர் கி.வைரமணி அவர்களிடம் தனது ஊரில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் நயினார்பாளையம் ஊர்ப்புற நூலக வளர்ச்சிக்காக மணமக்கள் வெங்கடேசன்-சுகுனா பெயரில் ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலர்ராக இணைந்துக்கொண்டார்.
இவர்களுடன் வாசகர் வட்டதுணைத் தலைவர் திரு .மதியழகன் உள்ளார்.
மணமக்கள் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ நூலகத்தின் சார்பாக வாழ்த்தினர்.

Reporter-7
விழுப்புரம் மாவட்ட
செய்தியாளர் அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலம் அருகே பயங்கரம் பெண் கழுத்தை அறுத்துகொலை.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 52) விவசாயி. இவரது மனைவி சரோஜா(47). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தண்டபாணி(26), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அய்யாக்கண்ணு, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். இதையடுத்து சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தண்டபாணி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ராஜா என்பவருடன் தண்டபாணி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது.

இதனால் அவர் நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்தார். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர், சரோஜாவின் வீட்டில் இருந்து உருட்டுக்கட்டையுடன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்டபாணியும், ராஜாவும் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த 2 பேரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து தண்டபாணி திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் பொதுமக்கள், பிடிபட்ட 2 பேரையும் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே தண்டபாணி தனது வீட்டுக்குள் சென்றார். அப்போது அங்கு சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து திடுக்கிட்ட தண்டபாணி தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் கெப்பன்(40), வீராசாமி மகன் சங்கர்(39) என்பதும், சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சரோஜா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட கெப்பனும், சங்கரும் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, கட்டிலில் படுத்திருந்த சரோஜாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் அவர்கள் 2 பேரும் சரோஜாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற போது, சென்னையில் இருந்து வந்த தண்டபாணி, கதவை தட்டியதால், அவரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அவர் பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெப்பனையும், சங்கரையும் கைது செய்தனர். நகைக்காக பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Reporter-7
விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர்
அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் -சின்னசேலம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம் சின்னசேலம் ஒன்றிய பாரதஜனத செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ராமசாமி,சிறப்பு அழைப்பாளர் கஜேந்திரன்,செந்தில்ராஜா,வரவேற்புரை சக்திவேல்,ஜெயபெருமாள்,மாவட்டசெயற்குழு உறுப்பினர் மாசிலாமணி,மற்றும் ஒன்றியமாவட்டநிர்வாகிகள்,ஒன்றியநிர்வாகிகள்,கிளைநிர்வாகிகள் மகளிர்அணி
ஆகியோர் கலந்துகொண்டனர்.

Reportet-7
விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர்
அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

சின்னசேலத்தில் நாம்தமிழர்கட்சியினர்கொடியேற்றுவிழா மற்றும் கொள்கை விளக்கும் பொதுகூட்டம்நடைப்பெற்றது.

விழுப்புரம்மாவட்டம்
சின்னசேலம் நாம்தமிழர்கட்சியின்
காந்தி பொது மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மழலை பாசறை ஒருங்கிணைப்பாளர் 7வயது தமிழ் அமுது கட்சியின் புலிக்கொடியை ஏற்றி பொதுக்கூட்டத்தை துவங்கி வைத்தார்.

இதில்நகரசெயலாளர் கார்த்திக் ,ஒன்றியசெயலாளர்பழனி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கராபுரம் தொகுதி செயலாளர் தலைமை தாங்கினார் ஆ.ராம்குமார் ராவணன் அசுரன் .

எழுச்சியுரை
மாநில இளைஞர் பாசறை செயலாளர் அருள் இனியன். தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறைசெயலாளர் இளையராசா ,சுரேஷ்.

தொகுதி ஒருங்கிணைப்பாளர்,ரமேஷ் பழனியப்பன் கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளர், சதீஸ் பாபு ஆத்தூர்சட்டமன்ற வேட்பாளர் பாபு, , கள்ளக்குறிச்சி,மாவட்ட தலைவர்
ராதகிருஷ்ணன், நகரசெயலாளர்
ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி இளைஞர் பாசறை செயலாளர்சதீஸ், மாவட்டமாணவர் பாசறைவச்சிரவேல், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மாரியப்பன,கராத்தே சக்திவேல்,சுரேஷ்,ஜெயபிரகாஷ்,குணசேகர் மணிகண்டன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை அலாவுதீன்,துணைச்
செயலாளர்தாமேதிரன்
மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Reporter-7
விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர்
அரவிந்தன்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் ரோட்டரி சங்கம் , கோவை சங்கரா கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாசவி கிளப்சார்பாக இணைந்து நடத்தும்
இலவச கண் சிகிச்சை முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இதில் சங்க தலைவர் பாண்டின் செயலாளர் சுரேஷ்குமார் பொருளாளர் சம்பத் மற்றும் உறுப்பினர்கள் அப்துல்ரகிம்,ராமசாமி,மதுரை முத்து,விஜயபாஸ்கர்,சிவவெங்கடேசன்ஆகியோர் கலந்துகொண்டனர். முதியவர்கள் , 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Reporter-7
விழுப்புரம்மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்